விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் நகராட்சி திடலில் மாபெரும் புத்தக திருவிழா 2024 நடைபெற உள்ளதை முன்னிட்டு இன்று புத்தக கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு வருவதையும், அதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் சி.பழனி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி ஸ்ருதன் ஜெய் நாராயணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது கி. ஹரிதாஸ், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீதர், மகளிர் திட்டம் திட்ட இயக்குனர் பூ. காஞ்சனா, உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: மதியழகன்.
கருத்துரையிடுக