விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், அரசினர் குழந்தைகள் இல்லத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு வாரம் குறித்த வானவில் ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு, குழந்தைகள் தொழிலாளர் விருது(children's labour award)தினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி. பழனி வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி பெற்றுக்கொண்டார். நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ருதன் ஜெய் நாரயணன், தனித்துணை ஆட்சியர் விஸ்வநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: மதியழகன்.
கருத்துரையிடுக