விழுப்புரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் சி .பழனி அவர்கள் தலைமையில் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதி மொழியினை ஏற்றுக்கொண்டனர். நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) அரிதாஸ், இணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள் ) மரு.லட்சுமணன், துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) மரு.செந்தில்குமார், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் (பொ) மரு.திலகவதி, இணை இயக்குனர் (குடும்ப நலம்) மரு.மணிமேகலை, தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) ஆனந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: மதியழகன்.
கருத்துரையிடுக