திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் குண்ணகம்பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வேம்பியம்மன் மற்றும் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் அஷ்டபந்தன குடமுழக்கு நன்னீராட்டு பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த ஜூலை 19-ஆம் தேதி ஆடி 3-ஆம் நாள் வெள்ளிக்கிழமை காலையில் மங்கல இசை கணபதி பூஜை, லட்சுமி பூஜையும், நவக்கிரகங்கள் பூஜை, ஹோமம், தீப ஆராதனை, விபூதி பிரசாதம் வழங்குதல், புதிய சுவாமிகள் கண்திறத்தல் நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் வாஸ்து சாந்தி, பிரவேச பலி, யாகசாலை பிரவேசம், முதல் கால யாகசாலை பூஜை, ஹோமம் தீப ஆராதனை, விபூதி பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது.
ஜூலை 20, சனிக்கிழமை விசேஷ சாந்தி, இரண் டாம் கால யாகசாலை பூஜை, ஹோமம், பிள்ளையார், நவக்கிரகங்கள், துர்க்கை அம்மன், மாரியம்மன், எதிருடையான் ஆகிய புதிய சுவாமிகள் பிரதிஷ்டையும், தொடர்ந்து மூன்றாம் கால யாகசாலை பூஜை, நாடி சந்தனம், தத்துவார்ச்சனை, ஹோமம், பூர்ணாகுதி, தீப ஆராதனை, விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது.
ஜூலை 21, ஞாயிற்றுகிழமை இன்று காலையில் நான்காம் கால யாகசாலை பூஜை, ஹோமம் பல்வேறு சிறப்பு வேள்வியும், 10.00 மணிக்கு புனிதநீர் கலச புறப்பாடு நிகழ்ச்சியும்,
தொடர்ந்து ராஜகோபுரம், ஸ்ரீ வேம்பியம்மன் கோபுரம், ஸ்ரீ மாரியம்மன் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு வேம்பியம்மன், மாரியம்மன், பரிவார மூர்த்திகள் மற்றும் நவக்கிரகங்களுக்கு கலசநீர் நீராட்டு அஷ்டபந்தன குடமுழக்கு நன்னீராட்டு பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் குண்ணகம்பூண்டி , அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: மதியழகன்.
கருத்துரையிடுக