Top News

செஞ்சி அருகே வீரணாமூர் கிராமத்தில், ஸ்ரீ பாலமுருகர் ஆலய மகா கும்பாபிஷேக விழா!

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் வீரணாமூர் கிராமத்தில் கந்தப்பார் மேட்டில் அருள்பாளித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ பாலமுருகர் ஆலய நூதன ஜூர்னோத்தாரன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. 
 
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஜூலை 20-ஆம் தேதி ஆடி 4-ஆம் நாள் சனிக்கிழமை காலையில் மங்கல இசை, விக்னேஸ்வர பூஜை, கோபூஜை, புண்யாஹவசனம், அனுக்ஞை, மகா கணபதி ஹோமம், லக்ஷ்மி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாஹூதி, தீப ஆராதனையும், தீர்த்த சங்கிரஹணம், அக்னி சங்கிரஹணம், சயானதி வாசம் தொடர்ந்து மாலையில் வாஸ்து சாந்தி, பிரவேச பலி, மண்டல பூஜை,வேதிசார்ச்சனை அக்னிகார்யம், முதற்கால ஹோமம், தீப ஆராதனை, பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது.

ஜூலை 21, ஞாயிற்றுகிழமை இன்று காலையில் திருப்பள்ளியெழுச்சி, மங்கள இசை, பாலமுருகனுக்கு இரண்டாம் கால ஹோமம், நாடிசந்தானம், தத்துவார்ச்சனை, பல்வேறு சிறப்பு வேள்வி, தீப ஆராதனையும், 8.30 மணிக்கு யாத்ராதானம், புனிதநீர் கலச புறப்பாடு நிகழ்ச்சியும், தொடர்ந்து ஸ்ரீ பாலமுருகர் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு விநாயகர், பாலமுருகர் மற்றும் நவக்கிரகங்களுக்கு கலசநீர் ஊற்றப்பட்டு மகா தீபாராதனையுடன் ஜீர்னோத்தாரன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதில் வீரணமூர் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் வீரணாமூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: மதியழகன்.


Post a Comment

புதியது பழையவை