விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சோலையம்மன் ஆலயத்தில் ஜூலை 30, செவ்வாய் அன்று 48 ஆம் நாள் மண்டல அபிஷேகம் நிறைவு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
மண்டலாபிஷேக விழாவை முன்னிட்டு உற்சவ அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மலர்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்து ஆராதனை நடைபெற்றது.
தொடர்ந்து யாகசாலை அமைத்து புனிதநீர் கலச வைத்து கணபதி ஹோமம், பூர்னாதி ஹேமம் என சிறப்பு யாகங்கள் செய்து கலச நீரை ஆலயத்தை வலம் வந்து மூலவர் சோலையம்மனுக்கு புனித கலசநீர் அபிஷேகம், பால் , தயிர், பஞ்சாமிர்தம், தேன் பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பூஜை பொருட்கள் மற்றும் 108 சங்காபிஷேக சிறப்பு அலங்காரம் செய்து மகா தீப ஆராதனை ஏற்றப்பட்டது. விழாவில் குலதெய்வ வழிபாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.
கருத்துரையிடுக