Top News

 விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியம் ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி வடபாலை கிராமத்தில் நடைபெற்றது. 


நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் PM JANMAN திட்டத்தின் கீழ் 48 பயனாளிகளுக்கு நபர் ஒன்றுக்கு 5.07 இலட்சம் ரூபாய் வீதம் 2 கோடியே 43 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான பணி ஆணையினை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கே.எஸ். மஸ்தான் பயனாளிகளுக்கு வழங்கினார். மேலும், கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ உபகரணங்கள் அடங்கிய பெட்டகமும் வழங்கப்பட்டது.

நிகழ்வில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தமிழரசன், மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் கண்மணி நெடுஞ்செழியன், வருவாய் வட்டாட்சியர் முஹம்மது அலி, வடபாலை ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா சீனுவாசன் உள்ளிட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

புதியது பழையவை