Top News

செஞ்சி: ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1 கோடியே 63 லட்சத்து 5 ஆயிரத்து 520 ரூபாய் மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகள்! அமைச்சர் மஸ்தான் வழங்கினார்!!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் 2024 - 2025 ஆம் கல்வியாண்டில் அரசு, நகராட்சி, ஆதிதிராவிடர் நல மற்றும் அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு பயின்ற மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவில் விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் அனைவரையும் வரவேற்க, செஞ்சி ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் விஜயகுமார், பேருராட்சி மன்ற தலைவர் மத்தியார் அலி வாழ்த்துரை வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து திண்டிவனம் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு, நகராட்சி, ஆதி திராவிடர் நல மற்றும் அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளான செஞ்சி, வல்லம், மேல்மலையனூர் ஆகிய ஒன்றியங்களில் உள்ள

செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மேல்மலையனூர் அரசு மேல்நிலைப்பள்ளி, அவலூர்பேட்டை அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஒலக்கூர் அரசு மேல்நிலைப்பள்ளி, வீரணாமூர் அரசு மேல்நிலைப்பள்ளி உள்பட 29 மேல்நிலைப் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு பயின்ற 1616 மாணவர்கள் மற்றும் 1762 மாணவிகளுக்கு, 1 கோடியே 63 இலட்சத்து 5 ஆயிரத்து 520 ரூபாய் மதிப்பீட்டிலான 3378 விலையில்லா மிதிவண்டிகளை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கே. எஸ். மஸ்தான் மாணவ, மாணவிகளுக்கு வழங்கி பேருரையாற்றினார். ஒரு மிதி வண்டியின் விலையானது ஆண்(மாணவர்): 4900/- ரூபாய், பெண்(மாணவி): 4760/- ரூபாய் ஆகும்.

இந்நிகழ்ச்சியில் திண்டிவனம் மாவட்ட கல்வி அலுவலர் சிவசப்பரமணி, மாவட்ட பள்ளி கல்வி அலுவலக துணை ஆய்வாளர் விநாயகமூர்த்தி, செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சத்தியமூர்த்தி உள்பட 29 பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்கள், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜலக்ஷ்மி செயல்மணி, பொன்னம்பலம், சுமித்ரா சங்கர், சங்கீதா சுந்தரமூர்த்தி உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.


Post a Comment

புதியது பழையவை