Top News

மேல்மலையனூர்: அங்காளம்மன் ஆலயத்தில் ஆதிசக்தி சிறப்பு அலங்காரத்தில் அமாவாசையை ஊஞ்சல் உற்சவம்! கொட்டும் மழையிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்!!

 

மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தில் ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு ஆதிசக்தி சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் உற்சவம், கொட்டும் மழையிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அருள்மிகு ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று ஊஞ்சல் உற்சவம் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு 04 ஆகஸ்ட் 2024 ஞாயிற்றுக்கிழமை காலை முதலே மூலவர் அங்காளம்மனுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பூஜை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து தங்கக் கவசம் அனிவிக்கப்பட்டு மகா தீப ஆராதனை ஏற்றப்பட்டது.

ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தை காண காலை முதலே விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், வேலூர் உள்பட தமிழக மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.

மேல்மலையனூர் பகுதியில் இரவு 9:40 மணி முதல் தொடர் மழை பெய்து வந்த நிலையில், பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட

உற்சவ அங்காளம்மன் ஆதிசக்தி சிறப்பு அலங்காரத்தில் இரவு 11.10 மணியளவில் மங்கள மேள வாத்தியம் இசைக்க வடக்கு வாசல் வழியாக ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஊஞ்சல் மண்டபத்தில் அம்மனை காண கொட்டும் மழையிலும் 2 மணி நேரமாக காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஊஞ்சலில் எழுந்தருளிய அங்காளம்மனை அங்காளம்மா,  அங்காளம்மா என மனமுருகியும்,  மனம்நெகிழ்ந்தும் சூடம் ஏற்றி சாமிதரிசனம் செய்தனர். வழக்கமாக சுமார் 1 மணி நேரம் நடைபெறும் ஊஞ்சல் ஊற்ச்சவமானது தொடர் மழையின் காரணமாக 15 நிடம் மட்டுமே நடைபெற்றது.

மேலும் பக்தர்களின் வருகைக்காக வேண்டி தமிழக போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. பக்தர்களின் பாதுகாப்பு கருதி காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டிருந்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் சுரேஷ் மற்றும் அறங்காவலர்கள், அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை