விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் 6 ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் செஞ்சி வட்டார வளர்ச்சி அலுவலர் சீதாலட்சுமி(வ.ஊ) அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து செஞ்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 161 பயனாளிகளுக்கு 5 கோடியே 69 லட்சத்து 77 ஆயிரத்து 900 ரூபாய் மதிப்பீட்டில்,
விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் சி. பழனி தலைமையில், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கே. எஸ். மஸ்தான் கலைஞர் கனவு இல்லம் வீடு கட்டும் பணி ஆணை வழங்கி சிறப்புரையாற்றினார். ஒரு பயனாளிக்கான கலைஞர் கனவு இல்லம் திட்ட வீட்டின் மதிப்பு 3,53,900/- ரூபாய் ஆகும்.
இந்நிகழ்ச்சியில் செஞ்சி ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் விஜயகுமார், பேரூராட்சி மன்ற தலைவர் முக்தியார் அலி, வருவாய் வட்டாட்சியர் ஏழுமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செஞ்சி வட்டார வளர்ச்சி அலுவலர் முல்லை(கி.ஊ) நன்றி உரை வழங்கினார்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.
கருத்துரையிடுக