விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று(செப்டெம்பர்-30) பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் உள்பட பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி பெற்றுக்கொண்டார்.
மேலும், சமூக நலத்துறை சார்பில், முதலமைச்சரின் இரண்டு பெண்குழந்தை பாதுகாப்பு திட்ட முதிர்வு தொகைக்கான வங்கி வரைவோலையினை பயானிகளுக்கு வழங்கினார். நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, மாவட்ட சமூக நல அலுவலர் ராஜம்மாள் உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.
கருத்துரையிடுக