விழுப்புரம்: வையகம் போற்றும் வைஷ்ணவி தேவி சிறப்பு அலங்காரத்தில், மேல்மலையனூர் அங்காளி!

 

விழுப்புரம் மாவட்டம் பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் புரட்டாசி மாத மாகாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு இன்று மூலவர் மற்றும் உற்சவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்து தீபாராதனை ஏற்றப்பட்டது. உற்சவர் அங்காளம்மன் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வையகம் போற்றும் ஸ்ரீ வைஷ்ணவி தேவி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி. மேலும், இன்று இரவு 10.30 மணிக்கு மேல் ஊஞ்சல் உற்சவம் நடைபெற உள்ளது. பக்தர்கள் வசதிக்காகவேண்டி பல்வேறு பகுதிகளில் இருந்து மேல்மலையனூருக்கு போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை