LED பல்ப் பொருந்திய இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் இரவு நேரங்களில் சாலையில் செல்லும் பொழுது அதிக ஒளி ஏற்படுவதால் எதிர் வரும் வாகன ஓட்டிகளுக்கு கண்களில் கூச்சம் ஏற்பட்டு நிலை தடுமாறி எதிரில் வரும் வாகனங்களில் மோதி அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர் சில நேரங்களில் உயிர் சேதமும் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு போக்குவரத்து காவல்துறை விரைவில் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
தலைமை செய்தியாளர்: சந்திரசேகர்.
கருத்துரையிடுக