விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், அக். 07 திங்களன்று வருவாய்த் துறை, பேரிடர் மேலாண்மைத் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் பழங்குடியின மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி. பழனி தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பிரதான் மந்திரி ஜன்மன் திட்டத்தின்கீழ், பழங்குடியினர் மக்களுக்கு வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணை உள்ளிட்ட நலத்திட்டங்களை அரசு முதன்மைச் செயலாளர்/ஆணையர், போக்குவரத்துத்துறை மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுன்சோங்கம் ஜடக் சிரு பயனாளிகளுக்கு வழங்கினார்.
நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் தீபக் சிவாச், மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், திண்டிவனம் சார் ஆட்சியர் திவ்யான்ஷு நிகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.
கருத்துரையிடுக