Top News

விழுப்புரத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம்! உணவு தரம் குறித்து நேரில் சென்று ஆய்வு செய்த ஆணையர்!!

 

விழுப்புரம் பூந்தோட்டம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் அக். 07, திங்களன்று முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின்கீழ் மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கப்படுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி தலைமையில், அரசு முதன்மைச் செயலாளர்/ஆணையர், போக்குவரத்துத்துறை மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுன்சோங்கம் ஜடக் சிரு நேரில் பார்வையிட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவினை உட்கொண்டு அதன் தரம் குறித்து ஆய்வு செய்தார். மேலும், மாணவ, மாணவியர்களுக்கு தனது கரங்களால் உணவு பரிமாறினார். 

அப்போது அவர் கூறியதாவது; விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டமானது 1,206 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு சுமார் 58,274 மாணவ, மாணவியர்கள் பயன்பெற்று வருகின்றனர். திட்டத்தில் திங்கட்கிழமை கோதுமை, ரவா உப்புமா, காய்கறி சாம்பார், செவ்வாய்க்கிழமை ரவா கிச்சடி, காய்கறி சாம்பார், புதன்கிழமை வெண்பொங்கல், காய்கறி சாம்பார், வியாழக்கிழமை அரிசி உப்புமா, காய்கறி சாம்பார் மற்றும் வெள்ளிக்கிழமை சேமியா கிச்சடி, காய்கறி சாம்பார் என்ற உணவு பட்யடிலின்படி மாணவ, மாணவியர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதனை பயன்படுத்திக் கொண்டு பள்ளி மாணவர்களாகிய நீங்கள் நல்ல முறையில் கற்றல் திறனை வளர்த்து கொள்ள வேண்டும் மேலும், பள்ளியின் ஆசிரியர்களிடம் மாணவர்களுக்கு சரியான முறையில் காலை உணவினை வழங்குவதோடு அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்திட சிறப்பான முறையில் பணிப்புரிய வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். தொடர்ந்து பள்ளியில் உள்ள சமையல் கூடம், குடிநீர் வசதிகள், கழிவறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியான முறையில் உள்ளனவா என ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்வுகளில் மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், மாவட்ட கல்வி அலுவலர் கௌசர் மற்றும் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை