Top News

செஞ்சியில், திமுக அரசை கண்டித்து, அஇஅதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்!

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நான்முனை சந்திப்பில் அக். 08, செவ்வாயன்று அதிமுக சார்பில் மாவட்ட எம்.ஜி.ஆர் இளஞர் அணி செயலாளர் பிரித்திவிராஜ் தலைமையில் திமுக அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

மனித சங்கிலி போராட்டத்தில் குடிநீர் வரியை குறைத்திடு, சொத்து வரி உயர்வை ரத்து செய், வீட்டு வரியை ஏற்றாதே, கஞ்சா புழக்கம் பரவிபோச்சு, விலைவாசி உயர்ந்து போச்சு உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகள் கையில் ஏந்தியவாறு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் முன்னால் மத்திய அமைச்சர் ராமச்சந்திரன், ஒன்றிய செயலாலர்கள் செஞ்சி கோவிந்தசாமி, மேல்மலையனூர் பாலகிருஸ்ணன், புண்ணியமூர்த்தி, வல்லம் வினாயகமூர்த்தி, நடராஜன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு பொருலாளர் அருண் தத்தன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை