தமிழ்நாடு முழுவதும் இன்று 12 -ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவு வெளியானதை தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், விழுப்புரம் மாவட்ட தேர்ச்சி அறிக்கையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்டார்.
மேலும் விழுப்புரம் மாவட்டத்தில்,+2 அரசு பொதுத் தேர்வில் 20,526 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்று சென்ற ஆண்டு தேர்ச்சி சதவீதத்தை விட நடப்பாண்டு (2024-2025) 1.94 சதவீதம் கூடுதலாக கிடைக்கப்பெற்று 95.11 சதவீதம் தேர்ச்சி விழுக்காடுடன் மாநில அளவில் 18-வது இடமும், அரசுப் பள்ளிகள் தேர்ச்சி சதவீதத்தில் 11-வது இடமும் பிடித்துள்ளது என மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெ.அறிவழகன் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துரையிடுக