தீவனூர் சுயம்பு பொய்யா மொழிவிநாயகர் கோவிலில் பிரம்மோற்சவ விழா
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுக்கா தீவனூர் கிராமத்தில் அமைந்துள்ள சுயம்பு ஸ்ரீ பொய்யாமொழி விநாயகர் திருக்கோவிலில் தேரோட்ட விழா நடைபெற்றது.
இதில் 01/05/2025 அன்று கணபதி ஹோமம் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கிய தேரோட்ட விழா தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை சுவாமி வீதி விழா நடைபெற்றது.
ஆறாம் நாள் தீவனூர் பொதுமக்கள்1008 பால்குடம் எடுத்து வீதி உலா வந்து பொய்யாமொழி விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்தனர்.
எட்டாம் நாளான இன்று திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. உற்சவர் விநாயகர் பல மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தேரில் அமர வைத்து பக்தர்கள் வடம் பிடித்து இழுத்னர். பக்தர்கள் தானியங்களை தேர்முன் வீசி வேண்டுதலை நிறைவேற்றினர்.
காலை முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருத்தேரானது வீதிகளில் வளம் வந்து கோவிலை வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கருத்துரையிடுக