ஸ்ரீ வலம்புரி பால விநாயகர் கோவிலில் 8 ஆம் ஆண்டு கும்பாபிஷேக பூர்த்தி விழா
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுக்கா இல்லோடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வலம்புரி பால விநாயகர் கோவில் எட்டாம் ஆண்டு கும்பாபிஷேக பூர்த்தி விழா நடைபெற்றது .
இதில் 01/05/2025 வியாழக்கிழமை அன்று பந்தக்கால் நட்டு விழா தொடங்கியது. இதனையடுத்து தினமும் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.
தொடர்ந்து புதன்கிழமை இன்று காலை 9 மணிக்கு 108 பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து பால விநாயகர்க்கு பால் அபிஷேகம் செய்தனர்.
தொடர்ந்து 9.30 மணிக்கு எஜமான சங்கல்பம் விநாயகர் பூஜை வருண பூஜை மகா பூர்ணாஹுதி தீபாராதனை காண்பிக்கப்பட்டது .
மேளதாளம் முழங்க கலசம் ஆலயத்தை வளம் வந்து மூலவருக்கு மகா அபிஷேகம் கலசபிஷேகம் 108 சங்காபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து பல மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இரவு உற்சவ வலம்புரி பால விநாயகர் பல மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பூப்பல்லக்கில் வீதியுலா நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் . பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கருத்துரையிடுக